நியூயார்க் நகரை சேர்ந்த இரண்டு நண்பர்கள் இணைந்து, 'பயோ லைட் ஸ்டவ்' ஒன்றை 2013 ம் ஆண்டு கண்டுபிடித்தனர். 'ஒரு வருடத்திற்கு 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், வீட்டில் எரிக்கப்படும் விறகின் புகையினால் இறக்கிறார்கள்' என்ற உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரத்தினை பார்த்த பிறகு, 'இந்த மக்களுக்காக புகையில்லா அடுப்பை கண்டுபிடிக்க வேண்டும்' என ஜொனாதன் சிடர் மற்றும் அலெஸ் டிரம்ண்ட் என்ற இருவர், தங்களுடைய வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, புதுவித எனர்ஜி ஸ்டவ்வை உருவாக்க ஆரம்பித்தார்கள்.
பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை அறிந்த அவர்கள், அடுப்பில் எரிக்கப்படும் நெருப்பின் மூலமாக மின்சாரம் பெற்று, அதன் மூலமாக செல்ஃபோன் மற்றும் டியூப் லைட்டை எரிய வைக்கும்படியான சாதனத்தையும், அந்த அடுப்புடன் இணைத்தார்கள்.
இரவு நேரங்களில் சமைக்கும்போது இருட்டில் சமைக்க வேண்டியதில்லை. மாறாக, டியூப் லைட்டினை பயன்படுத்தலாம். மேலும் செல்ஃபோன் மட்டுமல்லாது லேப்டாப், டேப் என அனைத்து சாதனங்களையும் இதில் சார்ஜ் செய்ய முடியும்.
பொதுமக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற இந்த ஸ்டவ் அடுப்பின் விலையானது, இந்தியாவில் 7,555 ரூபாய் முதல் தொடங்குகிறது.
இந்த ஸ்டவ்வினை பயன்படுத்தியதால், வீட்டில் ஏற்படும் புகையினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.