Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

பிகாரில் இடி மின்னல் தாக்கி 93 பேர் பலி


பிகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி குழந்தைகள், பெண்கள், உட்பட 93 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிகார் மாநிலத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் இடி, மின்னல் தாக்கியத்தில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இடி, மின்னலுக்கு பெண்கள், குழந்தைகள் என 93 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிகார் மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இவ்வாறு பீகார் பேரழிவு மேலாண்மை நிறிவனத்தின் மூத்த தலைவர் அனிருத் குமார் தெரிவித்துள்ளார்.

இடி தாக்கியதில் சாலையோர மரங்கள் எல்லாம் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மழைக்கால சேதங்களையும், உயிரிழப்புகளையும் தடுக்க பிகார் அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மழைக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.