ஒடிசா மாநிலத்தில், விறகு சேகரிப்பதற்காக காட்டுக்குள் சென்ற மூன்று பேரை கரடி தாக்கி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், நபராங்பூர் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தில் வசிக்கும் ஐந்து பேர், விறகு சேகரிப்பதற்காக அருகில் இருந்த காட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு திடீரென வந்த கரடி அவர்களை சுற்றி வளைத்து தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட வனத்துறையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த காட்டுப்பகுத்யில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட வனத்துறையின் எச்சரித்துள்ளனர்.
ஆனாலும், விறகுகளை பொறுக்கி கடைத் தெருவில் விற்பதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால், பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் காட்டுக்கு சென்று இப்படி மிருகங்களிடம் பலியாகும் சம்பவம் அந்த பகுதியில் அதிகரித்து வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.