Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

வயிறு, சுவாசம் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் ஆவாஹன முத்திரை


ஆவாஹனம் என்றால் அழைத்தல், அமர வைத்தல் என்று பொருள்படும். தந்திர யோகம் செய்யும் ஒவ்வொருவரும், இம்முத்திரை செய்வர். அதே போல் நித்திய பூஜையில் முக்கியமானது. இறைவனை அழைத்து, ஆசனத்தில் அமர வைக்கும் சடங்காக இம்முத்திரை காட்டப்படுகிறது.

குறிப்பாக 24 முத்திரைகள் நித்திய பூஜையின்போது காட்டப்படும். அதில் ஒன்று இது. இம்முத்திரை பூஜைக்கு மட்டுமன்று, உடற்குறைகளை போக்கவும் இது பயன்படுகிறது. பஞ்ச பூதங்களில், காற்றையும், நெருப்பையும் இம்முத்திரை கட்டுப்படுத்துவதால், வயிறு, சுவாசம் சீராகிறது.

அது சம்பந்தமான நோய்களும் தீர்ந்து விடுகின்றன. செரிமாணம் நன்கு நடைபெறுவதால் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கின்றன. இதனால் மூலாதார சக்கரம் தூண்டப்பட்டு சக்தி உற்பத்தியாகி, பொறாமை, கோபம் போன்ற உணர்ச்சிகளையும், வாத, பித்த, கப நாடிகளை சமன்படுத்தி, பத்து வகை வாயுக்களில், அபான, சமான, வியான என்ற பிராண வாயுக்களையும், கட்டுப்படுத்துகிறது.

செய்முறை :

கைகளை, சுண்டு விரல்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் படி வைத்து, உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும் படியும், கட்டைவிரல் மோதிர விரலின் அடிபாகத்தில் படும்படியும் வைக்கவேண்டும். இவ்வாறு 5 முதல் 15 நிமிடம் செய்ய வேண்டும்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.