Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

இறங்கும் இடத்தை தவற விடாதிருக்க இரவு நேர ரயிலில் எழுப்பிவிடும் வசதி


இந்திய ரயில்வேயில் கட்டணங்கள் மற்றும் பயணிகள் முன்பதிவில் ஜூலை 1ம் தேதி முதல் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மாற்றங்கள் குறித்த விபரங்கள் :
* ரத்து செய்யப்படும் தட்கல் டிக்கெட்களுக்கான 50 சதவீதம் தொகை திருப்பி அளிக்கப்படும்.
* தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கான நேரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி ஏசி பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், ஸ்லீப்பர் பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மட்டுமே திறந்திருக்கும்.
* ஜூலை 1 முதல் காத்திருப்போர் பட்டியல் இருக்காது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களும் ஆர்.ஏ.சி., டிக்கெட்களும் மட்டுமே வழங்கப்படும். காத்திருப்போர் பட்டியல் என்ற பிரிவு இனி இருக்காது.
* அடுத்த மாதம் முதல் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயிலில்கள் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளன.
* ராஜ்தானி மற்றும் சதாப்தி ரயில்களில் இனி காகிதம் இல்லா டிக்கெட் வழங்கப்பட உள்ளது. அதாவது மொபைல் போன்கள் மூலம் பெறப்படும் டிக்கெட்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
* இந்தியன் ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான ஐஆர்சிடிசி.,யில் பல்வேறு மொழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட உள்ளது.
* பிரிமீயம் ரயில்கள் இனி இருக்காது.
* ரத்து செய்யப்படும் சுவிதா ரயில் டிக்கெட்களுக்கான கட்டணத்தில் 50 சதவீதம் தொகை பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும்.
* இரவு நேர பயணம் செய்யும் பயணிகளுக்கு தாங்கள் இறங்கும் இடம் வருவதற்கு முன்னதாக ஒலி எழுப்பும் அழைப்பு வசதி கொண்டு வரப்பட உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.