அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அடைந்த தோல்வியையடுத்து சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச கால்பந்து அரங்கில் மெஸ்சியின் இந்த முடிவு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து அர்ஜென்டினா அணி நேற்று இரவு தாயகம் திரும்பியது. பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்தில் அர்ஜென்டினா அணியை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தானர். மெஸ்சி ''போக வேண்டாம் '' என்று ஏராளமான ரசிகர்கள் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.இணையத்தில் #ComeBackMessi என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர்.
இதற்கிடையே கோப்பையை வெல்லாமல் அர்ஜென்டினாவுக்குள் வரக் கூடாது என கூறியிருந்த மரடோனா'' மெஸ்சி இன்னும் விளையாட வேண்டியது நாட்கள் நிறைய இருக்கிறது. மெஸ்சி ரஷ்யா செல்ல வேண்டும் உலகச் சாம்பியாகி திரும்ப வேண்டும் ''என தெரிவித்துள்ளார்.
அதேபோல் அர்ஜென்டினா பிரதமர் மவுரிசியோ மாக்ரியும், மெஸ்சி ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.'' மெஸ்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர், ''கோபா அமெரிக்காவில் மெஸ்சி மற்றும் அர்ஜென்டினா அணியின் திறமை என்னை பெருமைக்குள்ளாக்கியுள்ளது. மெஸ்சி அடுத்தவர்களின் விமர்சனங்களுக்கு காது கொடுக்க கூடாது '' என அறிவுரை வழங்கியுள்ளார்.

பொதுவாகவே மெஸ்சி ரிசர்வ் டைப் . கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட மரடோனா' மெஸ்சிக்கு கேப்டனுக்குரிய தகுதி கிடையாது 'என்று கருத்து தெரிவித்திருந்தார். அது போன்ற விமர்சனங்களை மெஸ்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக தேசிய அணிக்காக பூட் அணிகிறேன். ஆனால் ஒரு டிராபி கூட வாங்கிக் கொடுக்க முடியவில்லை. அர்ஜென்டினா அணியின் ஜெர்சியை அணியும் போது தனக்கு குற்றவுணர்வு ஏற்படுவதாக மெஸ்சி கருதுவதாக சக வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.