Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

மீண்டும் சர்ச்சையில் கேரள விளையாட்டுத்துறை அமைச்சர்: தடகள வீராங்கனை அஞ்சு பரபரப்பு புகார்!


கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜனுக்கு எதிராக பிரபல தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் முதல்வரிடம் புகார் தெரிவிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ். இவர் 2003-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின்போது இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். இவர் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது விளையாட்டு கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் கம்யூனிஸ்ட் தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும் விளையாட்டுத்துறை அமைச்சரான இ.பி.ஜெயராஜனை, அஞ்சு சந்தித்து பேசினார். அப்போது,  அந்த சந்திப்பில் அஞ்சுவிடம் அமைச்சர் தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து அஞ்சு பாபி ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' அமைச்சர் எங்களை பார்த்தவுடன், கேரளாவில் விளையாட்டுத் துறை என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்பார் என்று நினைத்தோம். ஆனால், அவர், 'நீங்கள் அனைவரும் முந்தைய அரசினால் நியமிக்கப்பட்டவர்கள்தானே' என்றார். “நீங்கள் அனைவரும் வேறு கட்சியை சேர்ந்தவர்கள். உங்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் அனைத்தும் சட்டவிரோதமாக நடைபெற்று இருக்கிறது. இவை அனைத்து விதிமுறைகளுக்கு எதிரானது. என்னால் இதனை தடுக்க முடியும். இவை அனைத்தும் ஊழல்” என்று கூறினார்.

நாங்கள் அனைவரும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார். நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். விளையாட்டு மட்டுமே எங்களுடைய கட்சி. நான் காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் என எந்த அரசியல் கட்சி உறுப்பினரும் கிடையாது. நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். அது அரசுக்கு பிடிக்காவிட்டால், எங்கள் பணியை விட்டு செல்லச் சொல்லட்டும். ஆனால், நாங்கள் ஊழல் செய்தவர்கள் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சரின் நடவடிக்கை குறித்து முதலமைச்சரிடம் புகார் தெரிவிப்போம்'' என்றார்.

சமீபத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மரணம் குறித்து கருத்து தெரிவித்த கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன், 'முகமது அலி கேரளாவுக்காக நிறைய பதக்கங்களை வாங்கி தந்தவர்' எனக் கூறியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.