Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு!


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை கங்குலி, சச்சின் மற்றும் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழு முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில்  அனில் கும்ப்ளே, புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையை ஏற்று பி.சி.சி.ஐ, அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளது. இதன்படி ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு இந்த பதவியில் அனில் கும்ப்ளே இருப்பார்.

இதுகுறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ''இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை அனில் கும்ப்ளே செய்வார் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.