Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

"கண்ணீர் விட்டு கதறி" அழுத குஜராத் முதல்வர்


ஒரு மழலை குழந்தையின் பேச்சைக் கேட்டு, குஜராத் முதல்வர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
 
குஜராத் மாநிலம், கேதா மாவட்டத்தில் ஹீரஞ்ச் என்ற கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவி விழா முதல்வர் ஆனந்தி பென் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், 4 ஆம் வகுப்பு மாணவி அம்பிகா கோயல், பெண் சிசுக் கொலை குறித்து உணர்ச்சி மிகு உரையாற்றி பலரையும் நெகிழ வைத்தார்.

அப்போது, அந்தக் குழந்தை, தனது தாய்க்கு கருக் கலைப்புக்கு உள்ளான ஒரு பெண் குழந்தை கற்பனை கடிதம் எழுதியது போல அந்த சிறுமி அம்பிகா உணர்ச்சிகரமாக பேசமுடித்தாள்.

இதைக் கேட்ட, முதல்வர் ஆனந்தி பென் கண்களில் இருந்து கண்ணீர் பீறிட்டு வெளியானது. ஆனந்த கண்ணீரோடு, அந்த குழந்தை அம்பிகாவை அருகில் அழைத்து அப்படியே அணைத்துக் கொண்டார். மேலும், அந்த சிறுமிக்கு ஆப்பிள் பழத்தை பரிசாக கொடுத்து மகிழ்ந்தார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.