Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

டாய்லெட் பேப்பரில் ஒபாமாவின் புகைப்படம் : சர்ச்சையை ஏற்படுத்திய உணவகம்


ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிலிருந்து 4000 மைல்கள் தொலைவில் இருக்கும் ஊர் கரஸ்னொயார்க்ஸ். இந்த நகரத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கவுரவிக்கும் வகையில் ‘பிரசிடெண்ட் பேக்’ என்ற உணவு விடுதி என்று சமீபத்தில் திறக்கப்பட்டது.

அந்த விடுதியில் புதினின் சாதனைகளை விளக்கும் வகையில், அவரின் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி ஆன வரை நிகழ்ச்சிகள் அடங்கிய புகைப்படங்களில் தொகுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ஜெர்மனி பிரதமர் ஆகிய தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது.

அது ஒருபுறம் இருக்க, அந்த ஓட்டலின் உரிமையாளர் செய்து வைத்திருந்த சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கழிவறையில் நுழைந்தவுடன் கீழே தரையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்பில் அமெரிக்க தேசிய கொடி இருந்தது.

அதற்கும் ஒரு படி மேலே போய், கழிவறையில் உள்ள டாய்லெட் பேப்பரில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரங்கள், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.