Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

'என் ஆரோக்கியத்திற்குக் காரணம் யோகா...!'- ஸ்டாலின் சொல்லும் ஃபிட்னஸ் ரகசியம்!


சென்னை: உடலும் மனமும் ஆரோக்கியமுடன் திகழ அனைவரும் யோகா பயிற்சிகள் செய்யவேண்டும் என்று கூறியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் முறையான யோகா பயிற்சிக்கு அரசாங்கம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில்,

" சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 ம் தேதியை ஐ.நா. அவை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் இரண்டாவது ஆண்டாக இன்றைய நாளில், யோகா தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாப் பயிற்சிகள் மதம்-மொழி-இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பொதுவானதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் பன்னெடுங்காலமாக அந்தந்த மண்ணின் சூழலுக்கேற்ப யோகா பயிற்சிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக நான் யோகா பயிற்சிகள் செய்து வருகிறேன்.

இதன் காரணமாக மனஅழுத்தங்கள் குறைந்து, மக்கள் பணியில் சுறுசுறுப்புடன் ஈடுபடமுடிகிறது. உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் இளந்தலைமுறைக்கு அளிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது. இன்றைய இளந்தலைமுறையினருக்கு கல்விச்சுமை உள்பட பலவிதமான அழுத்தங்கள் இருப்பதால் விரக்தி மனப்பான்மைக்குள்ளாகிறார்கள்.

இத்தகையப் போக்குகளைத் தவிர்க்கும் விதத்தில், அனைத்துப் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் முறையான யோகா பயிற்சிக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். எளிய பயிற்சிகளின் மூலமாக இளந்தலைமுறையினர் வலிமையான உடலும் மனமும் கொண்டவர்களாக உருவாக்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.