இளமையாக இருப்பவர்களிடன் போய் சோதித்துப் பாருங்கள். அவர்கள் நிறைய நீர் குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஒருவகையில் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களும், இறந்த செல்களுமே வயதான தோற்றத்தை தரும். அவற்றை தினமும் வெளியேற்றிவிட்டால் சருமம் இளமையாகவே இருக்கும்.
வீட்டிலேயே இயற்கை முறையில் பப்பாளி, முட்டை, தேன் என பயன்படுத்தினால் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல், இறுக்கமான சருமத்தைப் பெற்று தொய்வடைவதிலிருந்து பாதுகாக்க முடியும். வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்தால் போதும்.
சர்க்கரை, கடலை மாவு, பயிற்றம் மாவு போன்ற இயற்கையான ஸ்கர்ப்பினால் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுங்கள். இவை சருமத்தை முதிர்ச்சி அடையாமல் காக்கும்.
என்ன உணவு சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்துதான் உறுப்புக்கள் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம் இருக்கும். ஆகவே இரண்டு வகையிலும் பயன் தரும் சருமத்தை ஆரோக்கியமான உணவினாலும் உங்கள் அழகை வெளிக் கொண்டு வர முடியும். ஆகவே நல்ல உணவுகள் உடற்பயிற்சியை தவறாமல் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தை பாதிக்கும் முதுமை அடையச் செய்யும். ஆகவே சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போக வேண்டாம். இயற்கையான ஹெர்பல் சன் ஸ்க்ரீன் லோஷன் நல்லது.
இரவுகளில் சருமத்திற்கு போஷாக்கு தரும் க்ரீம்களை தடவலாம். க்ரீம்தான் தடவ வேண்டுமென்பது இல்லை. ஆலிவ் எண்ணெய், பால் க்ரீம், தேங்காய் என்ணெய் ஆகியவற்றை தடவினால் இரவில் வெகு நேரம் எண்ணெய் சருமத்தில் ஊடுருவி, மெருகூட்டும்
முப்பதுகளில் சருமத்தில் வறட்சி தோன்ற ஆரம்பிக்கும். ஆகவே சருமம் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். நிறைய நீர் குடித்தும் மாய்ஸ்ரைசரை உபயோகித்தும் சருமத்தில் வறட்சி ஏற்படுத்தாமல் காத்திட வேண்டுவது முக்கியம். வீட்டில் இருக்கும், பால், தேன், பாதாம் ஆகியவை சருமத்திற்கு போஷாக்கு அளித்து, ஈரப்பதத்தை தக்க வைக்கும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.