Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

மருத்துவமனையில் சரத்குமார் திடீர் அனுமதி


நடிகர் சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் சமீபகாலமாக இறங்கு முகத்தில் உள்ளார். அதிமுக ஆதரவு விலகியதால் நடிகர் சங்க தேர்தலில் தோல்வி, கட்சி உடைந்தது என பல பிரச்னைகளில் சிக்கியவருக்கு மீண்டும்  தேர்தலில் போட்டியிட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.

ஆனால், திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தோல்வியை தழுவினார். சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வந்த சரத்குமாரை இதுபோன்ற தடங்கல்கள் முடக்கி போட்டன.

இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரையில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிக்கு சரத்குமார் செல்வதாக இருந்தது.  இதனிடையே, திடீரென சரத்குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டு நாள் ஓய்வுக்கு பின்னர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.

திடீர் உடல் நலக்குறைவால் சரத்குமாரின் மதுரை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.