மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி கிராமத்தில் 1935ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, பிறந்தார் பிரணாப் முகர்ஜி. தந்தை கமதா கின்கர் முகர்ஜி; தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர்.
1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராக இருந்த பிரணாப், எம்.ஏ., வரலாறு எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களை பெற்றவர்.
ஆரம்பத்தில், கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 ஜீலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., வாக உள்ளார். பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக, 1969,1975,1981, 1993 மற்றும் 1999ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தின் ஜாங்கிப்பூர் தொகுதியில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா அமைச்சரவையில் 1982-84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். 1984ல் பிரிட்டனை சேர்ந்த ஈரோமனி நாளிதழ், பிரணாப் முகர்ஜியை உலகின் சிறந்த நிதியமைச்சராக தேர்வு செய்து பாராட்டியது. இந்திராவின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்டிரிய சமாஜ்வாடி காங்கிரஸ் என்ற தனிக் கட்சி துவங்கினார். ஆனால், குறுகிய காலத்திலேயே மீண்டும் காங்கிரசில் இணைந்தார். 2004-06ல் ராணுவ அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
கடந்த, 2009-ம் ஆண்டிலிருந்து, நிதியமைச்சராக செயல்பட்ட பிரணாப், 2012 ஜூன் 15 ம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால், ஜூன் 26ம் தேதி நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது நாட்டின் 13வது ஜனாதிபதி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 45 ஆண்டுகளாக, அரசியலிலும், ஆட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த பிரணாப் முகர்ஜி, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, உயரிய அரசியல் பதவிக்கு செல்வதன் மூலம் புதிய பயணத்தை துவக்கியுள்ளார்.
***
குடியரசு தலைவரின் அதிகாரங்கள்!
உச்ச நீதிமன்றத்தின், உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், மாநில ஆளுநர், முப்படைகளின் தளபதிகள் வெளிநாட்டுக் கான இந்தியத் தூதர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். முப்படைகளின் தலைவர் இவரே.குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
முன்னாள் குடியரசு தலைவர்கள்!
அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்.
முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன்.
"பீப்பிள்ஸ் பிரசிடென்ட்' மற்றும் "இந்தியாவின் ஏவுகணை மனிதர்' என்னும் சிறப்பு பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.
குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்.
ஜனாதிபதி தேர்தல்!
மக்களவையில் 543 பேர், மேல் சபையில் 233 பேர் என பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஓட்டுப் போட தகுதி பெற்ற மொத்தம் 776 எம்.பி.,க்கள் உள்ளனர். மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்ட சபைகளில் மொத்தம் 4,170 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அதாவது மொத்தம் 4,896 பேர் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போடுவர்.
ஜனாதிபதி தேர்தலில் ஒரு எம்.பி., போடும் ஓட்டின் மதிப்பு 708. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறாது. எந்த மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.,யானாலும் அவருடைய ஓட்டின் மதிப்பு 708 தான்.
ஆனால் எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். உதாரணமாக, அதிக மக்கள் தொகையை கொண்ட உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு 208.
தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு 176. ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த மாநில எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே உத்தரபிரதேச எம்.எல்.ஏ.யின் ஓட்டு மதிப்புதான் அதிகம். குறைந்த ஓட்டு மதிப்பு சிக்கிம் எம்.எல்.ஏ.,க்களுக்கு. அங்கு ஒரு எம்.எல்.ஏ., போடும் ஓட்டின் மதிப்பு வெறும் 7 தான். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பெயரை 50 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும். 50 எம்.பிக்கள் வழிமொழிய வேண்டும். டெபாசிட் தொகையாக வேட்பாளர் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.