Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

தனியாரை விட லிட்டருக்கு ரூ.8 குறைவு: ஆவின் பாலுக்கு மாறும் பொதுமக்கள்


தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்வாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள்.

தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. இதனால் ஆவின் பாலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆவின்பால் தமிழகம் முழுவதும் 23 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் சென்னை நகரில் மட்டும் 11.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றில் 7.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் மாதாந்திர அட்டை மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. பால் அட்டை தாரர்களுக்கு வினியோகப்படும்.

ஒரு லிட்டரின்பால் விலையை விட தனியார் பால் விலை ரூ.6 முதல் ரூ.8 வரை உயர்வாக உள்ளது. இதனால் ஆவின் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளது. தனியார் பால் பாக்கெட்டுகளை பயன்படுத்தியவர்கள் அதனை கைவிட்டு ஆவின் பாலுக்கு மாறி வருகிறார்கள் ஆவின் பாலுக்கு ஏற்பட்டு வரும் தேவையை சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் தற்போது 11.5 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது. 13.5 லட்சம் லிட்டர் வரை வினியோக்ககூடிய சக்தி ஆவின் நிறுவனத்துக்கு தற்போது உள்ளது.

தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் பால் விலை உயர்வால் ஏற்கெனவே 23 ஆயிரம் லிட்டர் பால் தேவை அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி கூறுகையில், தனியார் பால் விலையை விட ஆவின் பால் விலை குறைவாக இருப்பதாக பேரளவில் தான் சொல்ல முடியும். அது பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக இல்லை. தனியார் பாலை சில்லறை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு பொதுவாக விற்பதாக இல்லை. ஆனால் ஆவின் பால் குறைந்த பட்ச விலையை (எம்.ஆர்.பி) காட்டிலும் கூடுதலாக விற்கிறார்கள். மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து பால் முகவர்கள் வாங்கி லிட்டருக்கு ரூ.2 கூடுதலாக விற்கிறார்கள். அப்படி விற்பதால் நஷ்டம் ஏற்படாது. மொத்த விற்பனையாளருக்கு கொடுக்க கூடிய கமிஷன் எங்களுக்கு கிடைப்பது இல்லை. இதனால் ரூ.41-க்கு விற்ககூடிய ஆவின் பாலை (பச்சை நிறம்) நாங்கள் ரூ.44க்கு விற்கிறோம். சில்லறை கடைகாரர்கள் அதைவிட கூடுதலாக ரூ.48க்கு விற்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பயன் கிடைப்பது இல்லை. அதனால் பால் அட்டை நடுத்தர மக்கள் விரும்பி வாங்குவது இல்லை.

பால் பெற்ற விற்பனையாளர்களை நீக்கினால் தான் இந்த பிரச்சனை தீரும். பொது மக்களுக்கு விலை குறைவு பலன் கிடைக்கும் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.