Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

பெண்ணின் படுக்கையறைக்குள் நுழைந்த மலைப்பாம்பு


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் நகரில் டிரினா ஹிப்பர்ட் என்ற பெண்மணி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கூரைக்கு மேல் குட்டி மலைப்பாம்பு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் டிரினா வீட்டில் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென வினோதமான ஓசை கேட்டு எழுந்துள்ளார்.

அப்போது, சுமார் 5.2 மீடா நீளமும் 40 கிலோ எடையும் கொண்ட அந்த ராட்சத மலைப்பாம்பு படுக்கையை உரசிக்கொண்டு ஊர்ந்து சென்றுள்ளது.

மலைப்பாம்பை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பாதுகப்பௌ படையினருக்கு  தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த அவர்கள் மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து பெரிய மரப்பெட்டியில் அடைத்தனர்.பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட அந்த மலைப்பாம்பு தற்போது விலங்குகள் பூங்காவில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து டிரினா கூறும்போது,

‘நீண்டகாலமாக எங்கள் வீட்டு கூரையில் பாம்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நான் இதுவரை பார்க்கவில்லை. எனினும், இன்று உணவு கிடைக்காத காரணத்தினால், அதனை தேடிக்கொண்டு அந்த மலைப்பாம்பு வீட்டிற்கு நுழைந்துருக்கலாம் என தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.