இஸ்லாமாபாத்,
எப்-16 ரக ஜெட் போர் விமானங்களை வாங்க அமெரிக்காவை சார்ந்து இருந்த பாகிஸ்தான் தற்போது ஜோர்டான் நாட்டில் இருந்து இவ்வகை விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதை பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் அய்சாஸ் அகமது சவுத்ரி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுசம்பந்தமாக பாகிஸ்தான் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு நிலைக்குழுவிடம் விவாதித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அய்சாஸ் அகமது சவுத்ரி தெரிவித்தவை பின்வருமாறு:-
அண்மைக்காலமாக, அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதற்கு சீனாவுடன் பாகிஸ்தான் அதிக நெருக்கமாக இருப்பதே காரணம். அமெரிக்காவுடன் சில விஷயங்களில் பாகிஸ்தானால் ஒத்துப்போக முடியாத நிலை இருக்கிறது. அதில், முக்கியமான ஒன்றாக இருப்பது பாகிஸ்தானின் இறையாண்மை. அமெரிக்காவுடனான கசப்பான உறவு என்பது பாகிஸ்தானுக்கு புதிதல்ல. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்கைகள் கண்டனத்திற்குரியவை. அமைதியை
நிலைநாட்ட 6 ஆண்டுகளை அமெரிக்கா செலவிட்டிருந்தால் நிலைமை வேறாகியிருக்கும். ஆனால், அமெரிக்கா 16 ஆண்டுகளை தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காக செலவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.