Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

இந்திய அலுவலகங்களில் தான் ஊழியர்கள் மகிழ்ச்சியாக பணி புரிகிறார்கள் ஆய்வில் தகவல்


சர்வதேச அளவில் 15 நாடுகளில் உள்ள 14,000 ஊழியர்களிடம் எடன்ரெட் லிப்சொஸ் பரோமெடர் (Edenred-Ipsos Barometer)  என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது.

பணியில் முழு கவனத்தை செலுத்துவது, ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் பணியை செய்வது மற்றும் ஒரு உற்சாகமான சூழலை உருவாக்கிக்கொள்ளும் ஊழியர்கள் எந்த நாடுகளில் அதிகமாக பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, இந்திய அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘தங்கள் மேல் அதிகாரிகள் தங்களிடமிருந்து என்ன வேலையை எதிர்ப்பார்க்கிறார்கள்’ என்பதை தெளிவாக புரிந்துக்கொள்வது மட்டுமின்றி, தன்னைச் சுற்றி ஒரு மகிழ்ச்சியான சூழலையும் உருவாக்கி கொள்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் அகதிகளுக்கு அதிகளவில் தஞ்சமளித்து வரும் ஜெர்மனி நாடு முதல் இடத்தில் இருக்கிறது.

அலுவலகங்களில் மகிழ்ச்சியாக பணிபுரியும் ஊழியர்கள் உள்ள நாடுகளின் பட்டியல்:

இந்தியா,மெக்சிகோ,அமெரிக்கா,ஜெர்மனி,இங்கிலாந்து,சீனா,
ஸ்பெயின்,பிரான்ஸ்,இத்தாலி,ஜப்பான் 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.