Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

டெல்லி சட்டசபையில் மேஜை மீது ஏறி நின்று அமளியில் ஈடுபட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.


டெல்லி சட்டசபை கூட்டத்தில்  எதிர்க்கட்சித் தலைவரான பா.ஜனதா எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா பேசும்போது, ‘ஷீலா தீட்சித் ஆட்சியின்போது நடந்த குடிநீர் தொட்டி ஊழல் குறித்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். ஷீலா தீட்சித்தை ஆம் ஆத்மி காப்பாற்ற நினைக்கிறது. இதுதொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

இதனை சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் ஏற்க மறுத்தார். முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், நாளையே அந்த அறிக்கையை தரத்தயார், நீங்களும் ஓய்வூதியம் ஊழலில் உங்கள் மனைவியின் பங்கு என்ன என்ற உண்மையை எனக்கு தரவேண்டும் என்றார். இதனால் கோபமடைந்த விஜேந்தர் குப்தா தனது இருக்கையைவிட்டு எழுந்து மேஜை மீது ஏறி நின்று, ஆம் ஆத்மி எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க நினைக்கிறது என்று கூறி அமளியில் ஈடுபட்டார். இது மிகவும் வெட்கக்கேடானது, அவையின் மாண்பை குறைப்பது என்று சபாநாயகர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.