Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

பாலியல் குற்ற சாட்டில் ஜிம்பாப்வேயில் 2 இந்தியர்கள் கைது அடையாளம் தெரிந்தது


ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மீது நேற்று திடீரென பாலியல் சர்ச்சை வெடித்தது.

‘‘ஜிம்பாப்வே பெண்ணை கற்பழித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஹராரே ஓட்டலில் அவரை கைது செய்ய விடாமல் ஜிம்பாப்வேக்கான இந்திய தூதர் ஆர்.மசாக்கு தடுக்க முயற்சித்தார்’’ என்று அங்குள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த தகவல் தவறானது என்று இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இந்திய அணி வட்டாரங்கள் கூறும் போது, ‘கற்பழிப்பு வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்திய தூதரிடம் நாங்கள் பேசினோம். இந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்த சம்பவத்தில் எந்த வீரருக்கும் தொடர்பு இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பந்தம் இல்லை என்பதை தூதர் மசாக்கும் உறுதி செய்தார்.


இந்த நிலையில் கற்பழிப்பு புகாரில் சிக்கியவர்கள்யார் என தெரியவந்து உள்ளது. ஒருவர் கிருஷ்ணா சத்ய நாராயண் இவர் ஐடீம் -ல் ஆலோசகராக பணிபுரிகிறார்,மற்றொருவர் ராஜ்குமார் கிருஷ்ணன் இவர் ஜிம்பாப்வே  தொழில் அதிபர் ஆவார்.சத்யநாராயண்  மற்றும் கிருஷ்ணா மெய்க்லஸ் ஓட்டலில் தங்கி இருந்த போது இந்த கற்பழிப்பு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.இதே ஓட்டலில் தான் இந்திய கிரிக்கெட் வீரர்களும் தங்கி இருந்தனர் இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தவறான தகவல் பரவி உள்ளது.

இந்தியா- ஜிம்பாப்வே தொடருக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்கும் நிறுவனம் ஒன்றின் நிர்வாகி தான் கற்பழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர். வீரர்கள் தங்கிய அதே ஓட்டலில் தான் இவரும் இருந்துள்ளார். இதைத் தான் தவறாக புரிந்து கொண்டு கிரிக்கெட் வீரர் கைது என்று தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள். அந்த நபரும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் அப்பாவி என்று நிரூபிக்க டி.என்.ஏ. சோதனைக்கு தயார் என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.