Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

ஐதராபாத்தில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்: புதிய சட்டம் வருகிறது


ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் என்ற சட்டம் ஐதராபாத் நகரில் இம்மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.

ஐதராபாத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்லும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதை வாகன ஓட்டிகள் சரிவர பின்பற்றவில்லை.

தினமும் 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து ஹெல்மெட் கட்டாய சட்டத்தை தீவிரப்படுத்த போக்குவரத்து போலீசார் நடவடிக்கையில் இறங்கினர்.

இது தொடர்பாக போக்குவரத்து, சட்டம்-ஒழுங்கு போலீசார் மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் ஒருங்கிணைந்த கூட்டம் நடந்தது.

இதில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் வழங்க வேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என்று விதிமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே இந்த விதிமுறை தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஐதராபாத் நகரில் இம்மாத இறுதியில் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தெற்கு போக்குவரத்து அதிகாரி ரங்கநாத் கூறுகையில், ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே பெட்ரோல் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்ட ஆதிலாபாத் மாவட்டத்தில் எந்தளவு செயல்பட்டது என்பதை ஆராய்ந்தோம்.

சில இடங்களில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுவும் கவனத்தில் எடுத்து கொள்வோம்.

இம்மாத இறுதியில் இச்சட்டம் ஐதராபாத்தில் அமல்படுத்தப்படும் என்றார். இதற்கு இருசக்கர வாகன ஓட்டிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.