ஜெர்மனியை தலைமையிடமாக வோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொதுவாக கார் என்ஜினில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே மாசு வெளியேற வேண்டும் என்ற சர்வதேச விதி உள்ளது. ஆனால் இந்த நிறுவனம் அதிக அளவு மாசு வெளியேறுவது தெரியாமல் இருக்க டீசல் என்ஜினில் சில தொழில்நுட்ப மோசடி செய்தது.
இந்த மோசடியை இந்திய கார் வல்லுனர்கள் தான் முதலில் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக வெளிவந்தது. கடந்த செப்டம்பர் மாதம் அந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை வெடித்தது. அப்போது தங்கள் கார்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக அந்நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு இந்த மோசடிக்கு தற்போதைய நிறுவன தலைவர் மத்தியாஸ் முல்லர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து கார் உரிமையாளர்கள், பங்குதாரர்கள், நிறுவன ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த மோசடி குறித்து வோல்க்ஸ்வேகன் முன்னாள் தலைவர் மார்ட்டின் வின்டர்கோர்ன், பொறுப்பு அதிகாரி ஹெர்பர்ட் டியஸ் உள்ளிட்டோரிடம் உயர்மட்ட அளவிலான விசாரணை நடந்து வருகிறது என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.