Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

பிரபல அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி சுட்டுக்கொலை


பிரபல அமெரிக்க பாடகி கிரிஸ்டினா கிரிம்மி ப்ளோரொடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரபல அமெரிக்க பாடகியான கிரிஸ்டினா கிரிம்மி (வயது 22) ”தி வாய்ஸ்” என்ற திறமைகளை வெளிப்படுத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர் ஆவார். இவர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி விட்டு ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் கிரிஸ்டினா கிரிம்மி சரமாறியாக சுட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த கிரிம்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைபலனின்றி அவர் இறந்தார். துப்பாக்கியால் சுட்ட மர்மநபரை கிரிம்மியின் சகோதரர் தடுக்க முயன்றபோது அந்த மர்ம நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.