Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

ஐபிஎல் இறுதிப்போட்டியை பெரிய திரையில் கண்டு களித்த மல்லையா சர்ச்சையை கிளப்பிய வீடியோ


வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி கடன் பாக்கிவைத்துள்ள விஜய் மல்லையா, தற்போது தலைமறைவாக லண்டனில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

அதேநேரம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மல்லையாவை நாடு கடத்த முடியாது என்றும் அதற்கு தங்கள் சட்டம் இடம் தரவில்லை என்றும் இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு- சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டியை மல்லையா தனது மகன் சித்தார்த்துடன் அமர்ந்து டிவியில் பார்த்து ரசித்துள்ளார்.

இந்த வீடியோவை அவரது மகன் சித்தார்த் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில், லண்டனில் நானும், எனது தந்தையும் ஐபிஎல் இறுதிப்போட்டியை பார்க்கிறோம். மொனாக்கோவில் நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தயத்தில் போர்ஸ் இந்தியா 3-வதுஇடம் பிடித்ததைவிட இந்த ஆட்டம் சிறப்பானதாக இல்லை என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

மல்லையா தனது மகன் மற்றும் வேறு சிலருடன் பெரிய அளவிலான திரையில் போட்டியை பார்த்தபடி ‘கோ ஆர்சிபி’ என உற்சாக மூட்டியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் சர்ச்சையையும் உருவாக்கி உள்ளது.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.