Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

செல்பியால் விளைந்த விபரீதம்: உத்தரபிரதேசத்தில் கங்கை நதியில் மூழ்கி 7 வாலிபர்கள் பலி


இளைஞர்களிடையே பெருகி வரும் ‘செல்பி’ மோகத்தால் விபரீதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு ‘செல்பி’ மோகம்தான் நேற்று உத்தரபிரதேசத்தில் 7 வாலிபர்களின் உயிரை பலி வாங்கியது.

கான்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜுகி மற்றும் கொலோன்கஞ்ச் பகுதிகளை சேர்ந்த 7 நண்பர்கள் கங்கை நதிக்கு குளிக்க சென்றனர். அங்கு கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையால் கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நண்பர்களில் சிவம் என்ற வாலிபர் குளித்து கொண்டிருக்கும் போதே தனது ஸ்மார்ட்போனை கொண்டு ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி தண்ணீருக்குள் மூழ்கினார். இதைப்பார்த்த அவரது நண்பர் மசூத் உடனே தண்ணீரில் குதித்து சிவத்தை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் நதியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால், மசூத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவர்களை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக மீதமுள்ள 5 பேரும் நீருக்குள் குதித்தனர். ஆனால் யாருமே கரை திரும்பவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் நீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்ற மீட்புக்குழுவினருடன் வாலிபர்களை தேடினர். ஆனால் 2 மணி நேரத்துக்குப்பின் 7 பேரும் சடலமாகவே மீட்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

‘செல்பி’ மோகத்தால் 7 பேர் பலியான இந்த சம்பவம் கான்பூரில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.