எஸ்.எஸ்.எல்.சி. முடித்து விட்டு ஐ.டி.ஐ. படித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் சேர புதிய திட்டம் கொண்டுவரப்பட உள்ளது என்று மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி கூறினார்.
சாதனை விளக்க கூட்டம்
மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மந்திரிகள் விஷ்ணு தியோசாய், ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி பேசியதாவது:-
மாநிலங்களின் நலன் கருதி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதாரணமாக தமிழ்நாடு மின்சார பற்றாக்குறையால் சிக்கி தவித்தது. அப்போதைய காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ரூ.7 ஆயிரம் கோடியில் தமிழ்நாட்டுக்கு மத்திய மின்தொகுப்பில் இருந்து மின்சாரத்தை கொண்டு வரக்கூடிய மின்வழி பாதையை அமைத்துக்கொடுத்தது.
உயர்கல்வியில் சேர புதிய திட்டம்
மாநிலங்களில் ஐ.டி.ஐ. தொழில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் என்.சி.வி.டி. அமைப்பு மூலம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் 18 லட்சம் மாணவர்கள் தற்போது ஐ.டி.ஐ. படித்து வருகின்றனர். இதுவரை ஐ.டி.ஐ. படித்தவர்களின் கல்வித்தகுதி 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பாக உள்ளது. அவர்கள் ஐ.டி.ஐ.யில் 2 ஆண்டுகள் படித்தவுடன் அவர்களது படிப்பு நின்று விடும். உயர்படிப்பு படிக்க மீண்டும் 9-ம் வகுப்போ அல்லது 11-ம் வகுப்போ படிக்க வேண்டும்.
இதனை மாற்றி 8-ம் வகுப்பு படித்து விட்டு ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு, 2 ஆண்டுகள் படிப்பு கணக்கில் எடுக்கப்பட்டு நேரடியாக 11-ம் வகுப்பும், 10-ம் வகுப்பு படித்தவர்களின் 2 ஆண்டு படிப்பு கல்வித்தகுதியாக ஏற்கப்பட்டு நேரடியாக உயர்கல்வி படிக்கவும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. ஐ.டி.ஐ. படித்தவர்கள் வேலைக்கு செல்லலாம். வேலை கிடைக்காதவர்கள், திறனை மேம்படுத்திக்கொள்ள பாலிடெக்னிக், என்ஜினீயரிங் போன்ற உயர்கல்வியை தொடரலாம். இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 17-ந் தேதி அறிவிக்க உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.