வாஷிங்டன்: ராணுவ உறவில் இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து அளிக்கும் சட்ட திருத்த மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்ற முடியவில்லை. பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தபின் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், ‘‘ராணுவ உறவில் இந்தியாவை நெருங்கிய நட்பு நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது’’ என கூறப்பட்டது.
இந்த அங்கீகாரம் பெற்றுவிட்டால், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இணையாக ராணுவ தொழில்நுட்பங்களை இந்தியா பெற முடியும். இதற்காக தேசிய ராணுவ அங்கீகாரச் சட்டத்தின்(என்.டி.ஏ.ஏ) 17வது பிரிவில் குடியரசு கட்சியின் சென்ட் உறுப்பினர் ஜான் மெக்கைன் திருத்தம் கொண்டு வந்தார். என்.டி.ஏ.ஏ சட்டம், செனட்டில் நடந்த ஓட்டெப்பில் 85-13 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று நிறைவேறியது.
ஆனால் அதில் செய்யப்பட்ட சில முக்கிய திருத்தங்களை நிறைவேற்ற முடியவில்லை. இது ஏமாற்றம் அளிப்பதாக கருத்து தெரிவித்த மெக்கைன், அமெரிக்க மேலவையில் இந்தியாவுக்கு நல்ல ஆதரவு இருந்தும், தேசிய பாதுகாப்பு தொடர்பான சில விஷயங்கள் மீது விவாதம் நடத்தி நிறைவேற்ற முடியவில்லை எனறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.