Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

இந்தியாவிற்கு ஆதரவு அளியுங்கள், என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா மீண்டும் கோரிக்கை


என்.எஸ்.ஜி.யில் உறுப்பினராக இந்தியாவிற்கு ஆதரவு அளியுங்கள் என்று உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா மீண்டும் கோரிக்கை விடுத்து உள்ளது.

அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் (என்.எஸ்.ஜி.) 48 நாடுகள் உறுப்பினர்களாக இடம்பெற்று உள்ளன. இந்த குழுவில் இடம் பெறுவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்தியா கடந்த மே 12–ந்தேதி விண்ணப்பித்தது. அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் இந்த குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியா என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அதே அடிப்படையில் இந்தியாவுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அணுசக்தி வினியோக நாடுகள் குழுவின் ஆண்டு கூட்டம் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் வருகிற 24–ந்தேதி நடைபெறுகிறது. இதில், அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா சேர்க்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்நிலையில் சியோலில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது இந்தியாவின் விண்ணப்பத்திற்கு ஆதரவு அளிக்க உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்து உள்ளது.

புதிய நாடுகளை அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் சேர்க்கும் திட்டம் சியோல் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று சீனா கூறிய நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்து உள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜோஷ் ஏர்நெஸ்ட் பேசுகையில், “அணுசக்தி வினியோகம் செய்யும் நாடுகள் குழுவில் இணைய இந்தியா தயாராக உள்ளது, இவ்வாரம் இறுதியில் சியோலில் நடைபெறும் கூட்டத்தின் போது இந்தியாவின் விண்ணப்பத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்து உள்ளது,” என்று கூறிஉள்ளார். குழுவில் உறுப்பினராக கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதில் உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டவேண்டிய அவசியம் உள்ளது, இந்தியா உறுப்பினர் ஆகுவதற்கு அமெரிக்கா நிச்சயமாக வாதாடும்,” என்றும் ஜோஷ் கூறிஉள்ளார். இந்தியா உறுப்பினர் ஆகுவதை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது என்றும் கூறிஉள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.