Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

91 குழந்தைகள் பாலியல் பலாத்கார குற்றவாளி 2013-ல் பெங்களூர் அனாதை இல்லத்திற்கு வந்து உள்ளார்


மலேசிய குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து, அது தொடர்பான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட இங்கிலாந்து ஆசிரியருக்கு 22 ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் ஹாக்லே ( வயது 30) என்பவர், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள கான்வெண்ட் பள்ளியில் படிக்கும் ஏழை கிறிஸ்துவ குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

குழந்தைகள் மீதான பாலியல் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்து, அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் 91 குழந்தைகளை தனது பாலியல் இச்சைக்கு பலியாக்கி உள்ளார். தனது கணினியில் சுமார் 20,000 ஆயிரம் ஆபாச புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த2014 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மலேசியாவில் இருந்து இங்கிலாந்துக்கு திரும்பிய இவரை கேட்விக் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தினர் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட இவர், எஞ்சிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார்.

இவர் மீதான வழக்கு இங்கிலாந்தில் உள்ள மத்திய குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது, இந்நிலையில் நேற்று விசாரணை நடைபெற்றபோது, நீதிபதி பிரைன் ஓ நெய்ல் கூறும் போது

குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் அவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகும்.இவர் செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டாலும், அது போதிய தண்டனையாக அமையாது என கூறியுள்ளார், தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

71 குற்ற செயல்கள் செய்த ஹக்லேவுக்கு லண்டன் நீதி மன்றம்  ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது.தற்போது 30 வயதாகும் ரிச்சர்ட் ஹக்லே, முதல் ஆயுள் தண்டனை காலத்தில் குறைந்தது 25 ஆண்டுகளாவது அவன் சிறைக்குள் கழிக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.