கொப்பல் அருகே திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட வாலிபரை அவருடைய குடும்பத்தினர் அடித்து, உதைத்து இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதல்
கொப்பல் மாவட்டம் எலபூர்கா தாலுகா கதகேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவு என்ற சிவக்குமார்(வயது 18). இவர், கொப்பல் ரெயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வருகிறார். இந்த சந்தர்ப்பத்தில் சிவுக்கும், திருநங்கை ராதிகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் சிவுவின் குடும்பத்தினருக்கு தெரியாது. இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிவு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் சிவுவை அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
திருமணம்
இந்த நிலையில் சிவு, தனது காதலியான திருநங்கை ராதிகாவை திருமணம் செய்து கொண்டு கொப்பல் டவுனில் குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது. அதை அறிந்த சிவுவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் கொப்பல் டவுனுக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், அவர்கள் திருநங்கைகள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு சிவு, திருநங்கை ராதிகாவுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்த அவர்கள் சிவுவிடம், தங்களுடன் வந்துவிடும்படி கூறினார்கள். ஆனால், சிவு மறுத்துள்ளார்.
அடி-உதை
மேலும் திருநங்கை ராதிகாவை, தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சிவு கூறியதோடு, ராதிகாவுடன் தான் சேர்ந்து வாழுவேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவுவின் குடும்பத்தினர் அவரை அடித்து, உதைத்து அங்கிருந்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நேற்று கொப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.