சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, பச்சை மிளகாய் விலை சரிந்துள்ளது.
தக்காளி, பச்சை மிளகாய் விலை சரிவு
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு காய்கறி வினியோகம் செய்யும் தளமாக கோயம்பேடு மார்க்கெட் விளங்கி வருகிறது. இங்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
கோயம்பேடு மார்க்கெட்டில் சில நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ரூ.120 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலையும் படிப்படியாக சரிவடைந்து வருகிறது. இதேபோல பச்சை மிளகாய் வரத்தும் அதிகரித்து இருப்பதால் அதன் விலையும் குறைந்துள்ளது.
லாரி வாடகை உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி விலை குறித்து காய்கறி மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர் வி.ஆர்.சவுந்தரராஜன் கூறியதாவது:-
மத்திய அரசு ஆட்சிக்கு வந்து இதுவரை 12 முறை டீசல் விலையை கூட்டியது. இதனால் லாரி வாடகை சுமார் 20 சதவீதம் உயர்ந்தது. இதையொட்டி காய்கறிகள் விலையும் அதிகரித்தது.
தற்போது தக்காளி, பல்லாரி வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது.
விலை நிலவரம்
நேற்று முன்தினம் ரூ.70 வரை விற்பனையான தக்காளி நேற்று ரூ.50-க்கும், ரூ.100-க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் ரூ.30-க்கும் சரிவடைந்தது. இதே போல் ரூ.40-க்கு விற்பனையான கேரட் ரூ.30-க்கும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட சவ்சவ் ரூ.35-க்கும், ரூ.25-க்கு விற்பனையான முட்டைகோஸ் ரூ.20-க்கும், ரூ.50 வரை விற்பனையான சேனைக் கிழங்கு ரூ.35-க்கும், ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்டைக்காய் ரூ.35-க்கும், ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட கோவைக் காய் ரூ.20-க்கும், ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட இஞ்சி ரூ.55-க்கும் குறைந்து விற்பனையானது. ஆனால் ரூ.80 வரை விற்பனையான முருங்கைக் காய் ரூ.120 ஆகவும், ரூ.70-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ.80 ஆகவும், ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட அவரைக்காய் ரூ.60 ஆகவும் அதிகரித்தது. சாம்பார் வெங்காயம், காலிபிளவர், முள்ளங்கி, புடலங்காய், வாழைக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.