Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

திருக்கோவிலூர் பகுதியில் திடீர் மழை: விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி நெல் மூட்டைகள் நாசம்


திருக்கோவிலூர் பகுதியில் திடீரென மழை பெய்ததால் விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி நெல் மூட்டைகள் நாசம் நாசமாயின.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அரகண்டநல்லூரில் உள்ளது. இந்த விற்பனைக் கூடத்தில் நேற்று விற்பனைக்கு சுமார் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்திருந்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் திடீர் என மழை பெய்யத்தொடங்கியது.

தொடக்கத்தில் லேசாக சாரல் மழையாக தொடங்கி சற்று நேரத்திற்குள் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையாக மாறியது. இதனால் விற்பனைக் கூடத்தில் களத்தில் இறக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல்மூட்டைகளும், ஏற்கனவே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு எடுத்து செல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் நெல் மூட்டைகளும் ஆக மொத்தம் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாயின.

அதேபோல் 3 ஆயிரம் மூட்டை மக்காச்சோளமும் நனைந்து நாசமாயின. இதனால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு ரூ. 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வியாபாரி தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்மூட்டைகளை இறக்கி வைக்க அரசு குடோன்கள் கட்டி கொடுத்திருந்தும் அந்த குடோன்களில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை வைக்க முடியவில்லை.

எனவே விவசாயிகளுக்கு என கட்டப்பட்டுள்ள அனைத்து குடோன்களையும் அதனை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகள் உடனே அகற்றிட விற்பனைக்கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.