Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

கார்வார் அருகே பயங்கரம் கழுத்தை அறுத்து 2-வது மனைவி, மாமியார் படுகொலை வியாபாரிக்கு போலீஸ் வலைவீச்சு


கார்வார் அருகே கழுத்தை அறுத்து 2-வது மனைவி மற்றும் மாமியாரை படுகொலை செய்த வியாபாரியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

2-வது திருமணம்

கார்வார் மாவட்டம் சிர்சி தாலுகா சித்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அன்னப்பா. இவரது மனைவி திவ்யா (வயது 26). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தனது வீட்டின் அருகேயே அன்னப்பா ‘டீ‘ வியாபாரம் செய்து வந்தார். அன்னப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அன்னப்பா தனது முதல் மனைவியை கொலை செய்திருந்தார். இதற்காக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த அன்னப்பா, திவ்யாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அதுபோல, திவ்யாவுக்கும் இது 2-வது திருமணம் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திவ்யாவின் தாய் லட்சுமியம்மா தனது மகளை பார்க்க கானஹள்ளிக்கு வந்திருந்தார்.

மனைவி, மாமியார் படுகொலை

இந்த நிலையில், நேற்று மதியம் அன்னப்பாவுக்கும் திவ்யாவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதனால் ஆத்திரமடைந்த அன்னப்பா, திவ்யாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற மாமியார் லட்சுமியம்மாவின் கழுத்தையும் அன்னப்பா அறுத்ததாக தெரிகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக செத்தார். உடனே அங்கிருந்து அன்னப்பா தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அறிந்ததும் சித்தாபுரா போலீசார் விரைந்து வந்து லட்சுமியம்மா, திவ்யாவின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மனைவி, மாமியாரை என்ன காரணத்திற்காக அன்னப்பா தீர்த்து கட்டினார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அன்னப்பாவை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்

இதேபோல், பெலகாவி மாவட்டம் படகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. திருமணம் ஆனவர். இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பசப்பா நாயக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜேஸ்வரி தனது கணவரை பிரிந்து பசப்பா நாயக்குடன் சிவபீடா கிராமத்தில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி-பசப்பா நாயக் ஆகியோரிடம் யாரோ மர்மநபர்கள் தகராறில் ஈடுபட்டு அவர்களின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து, ராமதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகிறார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.