Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 4, 2016

வேலைக்கார பெண்ணை அருகில் நிற்க வைத்து விட்டு உணவருந்தும் காங்கிரஸ் முன்னாள் பெண் மந்திரியால் சர்ச்சை


முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி வீட்டு வேலைக்கார பெண்ணை அருகில் நிற்க வைத்துவிட்டு உணவருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியாக ரேணுகா சவுத்திரி இருந்தார். இவர் சமீபத்தில் விடுதி ஒன்றில் குடும்பத்துடன் உணவருந்த சென்றுள்ளார்.இதில் சவுத்ரியின் குடும்பத்தில் உள்ள அனைவரும் உட்கார்ந்து உணவு அருந்தி கொண்டிருக்க வேலைக்கார சிறுமி மட்டும் அருகில் நின்று கொண்டு அவர்கள் சாப்பிடுவதை பார்த்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. சிலர் இது ஒரு நவீன அடிமைத்தனம் என்று விமர்சித்துள்ளனர். தற்போது இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.