Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 11, 2016

மக்களின் இதயத்தை கவர்ந்த கலெக்டர், அலுவலகத்தை பள்ளிகூடமாக்கினார்!


கேரளா கோழிக்கோடு மாநில கலெக்டர் என். பிரசாந்த் தன்னுடைய சிறப்பான பணியினால் மீண்டும் ஒருமுறை மக்களின் இதயத்தை கவர்ந்து உள்ளார்.

மலப்புரம் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தவின்படி மூடப்பட்டது. இதனால் மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்தனர். பள்ளி மாணவர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றுவது என்று முடிவுசெய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த் பங்கு பெற்று இருந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. பள்ளிகள் பாதுகாப்பு குழு எந்தஒரு பிரச்சனையும் எழுப்பாது என்று உத்தரவாதம் கொடுத்த பின்னரே இம்முடிவானது எடுக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் பெரும்பாலான பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கிஉள்ளார்.

பள்ளியை சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியாளர்களுக்கும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தை ஒதுக்கி கொடுத்து உள்ளார். தற்போதைக்கு மொத்த மாணவர்களுக்கும் கலெக்டரால் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோழிக்கோடு கலெக்டராக உள்ள பிரசாந்த் வறியவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அரசிடம் இருந்து எந்தஒரு மானியமும் பெறாமல், சாதாரண மக்கள் மகிழ்ச்சியோடு அழிக்கும் நன்கொடையை ஏற்றுக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கலெக்டர் பிரசாந்த் தன்னுடைய சமூக பணிகளால் சமூக வலைதளங்களில் மிகவும் அறியப்பட்டவர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.