வலம்புரி என்ற நாட்டை அரசன் சுந்திரேசன் ஆண்டு வந்தான். மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க விரும்பிய அவன், அருவிகள் கொட்டும் அழகிய மலைப் பகுதியில் சில நாட்கள் தங்க முடிவு செய்தான்.
வீரர்கள் சூழப் புறப்பட்ட அவன், அங்கே கூடாரமிட்டுத் தங்கினான். அருவியில் மகிழ்ச்சியாக நீராடினான். பசுமையான மலைப் பகுதிகளைக் கண்டு களித்தான்.
இரண்டு நாட்கள் சென்றன-
அவனிடம் வந்த அமைச்சர், ""அரசே! நீங்கள் வெளியே சென்ற போது, இங்கே திருட்டு நடந்து விட்டது. ஆயிரம் பொற்காசுகள் இருந்த பையைக் காணவில்லை. காவல் காக்கும் வீரர்களில் எவனோ ஒருவன்தான் திருடி இருக்க வேண்டும்,'' என்றார்.
""அமைச்சரே! கூடாரத்தைக் காவல் காக்கும் பத்து வீரர்களும் நம்பிக்கைக்கு உரியவர்கள். அவர்களில் உண்மையான திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்ற வீரர்கள் உள்ளம் வருந்தக் கூடாது,'' என்றான்.
""அரசே! நீதிபதி வர்மனை அழையுங்கள். அறிவு நிறைந்த அவர் எப்படியும் திருடனைக் கண்டுபிடித்து விடுவார்,'' என்றார் அமைச்சர்.
வீரன் ஒருவனை அழைத்த அரசன், ""நீ சென்று நீதிபதியிடம் நடந்ததைச் சொல்லி அவரை இங்கே அழைத்து வா,'' என்றான்.
அந்த வீரனும் சென்று நீதிபதியை வணங்கி நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னான்.
""அரசர் தங்களை அழைத்து வரச் சொன்னார்,'' என்றான் வீரன்.
என்ன செய்வது என்று சிந்தித்தார் நீதிபதி.
நல்ல வழி ஒன்று அவருக்குத் தோன்றியது.
கழுதை ஒன்றை இழுத்துக் கொண்டு அரசனின் கூடாரத்திற்கு வந்து, அரசனை வணங்கினார்.
அவர் கழுதையுடன் வந்திருப்பதைப் பார்த்து வியப்படைந்தான் அரசன்.
""நீங்கள்தான் திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். அதே சமயம் நம்பிக்கையான மற்ற வீரர்கள் உள்ளம் வருந்தக் கூடாது,'' என்றான்.
""அரசே! திருடனை நான் கண்டுபிடிக்க வேண்டாம். இந்த மந்திரக் கழுதை எளிதாக கண்டுபிடித்து விடும்,'' என்றார் வர்மன்.
""உங்கள் கழுதை திருடனைக் கண்டுபிடிக்குமா? நம்ப முடியவில்லையே,'' என்று வியப்புடன் கேட்டான் அரசன்.
""அரசே! இந்தக் கழுதையைத் தனி இடத்தில் நிறுத்த வேண்டும். உண்மையான திருடனை இது கண்டுபிடிப்பதை உங்கள் கண் முன்னரே காட்டுகிறேன்,'' என்றார் அவர்.
அரசன் சைகை காட்ட வீரர்கள் அங்கே வந்தனர். இன்னொரு கூடாரத்திற்குக் கழுதையை இழுத்துக் சென்றனர்.
கழுதை இருப்பது யாருக்கும் தெரியவில்லை.
""அரசே! உங்கள் கூடாரத்தைக் காவல் காக்கும் வீரர்களை அழையுங்கள்,'' என்றார் வர்மன்.
பத்து வீரர்களும் அங்கே வந்து அவர் முன் நின்றனர்.
""உங்களில் யார் பொற்காசுகளைத் திருடியது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். குறைவான தண்டனையே கிடைக்கும். இல்லையேல்... என் கழுதை உண்மையான திருடனைக் கண்டுபிடித்து விடும். அதன் வாலைத் தடவி விட்டு வருமாறு உங்களை ஒவ்வொருவராக அனுப்புவேன். திருடன் அதன் வாலைத் தொடும் போது, அது பயங்கரமாகக் கத்தும். உண்மையான திருடன் சிக்கிக் கொள்வான்,'' என்றார்.
அவர்கள் யாருமே தாங்கள் திருடியதாக ஒப்புக் கொள்ளவில்லை.
""வேறு வழி இல்லை. மந்திரக் கழுதையைப் பயன்படுத்த வேண்டியதுதான். நீங்கள் ஒவ்வொருவராகச் சென்று கழுதையின் வாலைத் தடவி விட்டு வாருங்கள்,'' என்றார் நீதிபதி.
முதலாவது வீரன் அந்த கூடாரத்திற்குள் சென்றான். கழுதை கனைக்கவில்லை.
இப்படியே பத்து வீரர்களும் உள்ளே சென்று திரும்பினர். கழுதை கனைக்கவே இல்லை.
இதைப் பார்த்த அரசன், ""உங்கள் மந்திரக் கழுதையால் திருடனைக் கண்டுபிடிக்க முடியவில்லையே,'' என்றான்.
""அரசே! அவரசப்பட வேண்டாம்,'' என்றார்.
அந்தப் பத்து வீரர்களையும் ஒவ்வொருவராக அழைத்தார். அவர்கள் கையை முகர்ந்து பார்த்தார்.
அவர்களில் ஒருவனைக் காட்டி, ""இவன்தான் திருடன்; உங்கள் பொற்காசுகளைத் திருடியவன்,'' என்றார்.
""நான் திருடவில்லை,'' என்று மறுத்தான் அவன்.
""அரசே! அந்தக் கழுதையின் வாலில் கற்பூரத்தைத் தடவி இருந்தேன். அதன் வாலை யார் தடவினாலும் அவர் கையில் கற்பூர மணம் இருக்கும். இவர்களில் இவன் கையில் மட்டும் கற்பூர மணம் வீசவில்லை. திருடனான இவன் கழுதை கனைத்துத் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று அஞ்சினான். உள்ளே சென்று கழுதையின் வாலைத் தடவாமலேயே வந்து விட்டான். இவன்தான் திருடன் என்பது உறுதியாகி விட்டது,'' என்றார் அவர்.
திருட்டு வெளிப்பட்டதை அறிந்து நடுங்கினான் திருடன்.
""அரசே! என்னை மன்னியுங்கள். அந்தப் பொற்காசுகளைத் தந்து விடுகிறேன்,'' என்று கெஞ்சினான்.
அவனுக்கு தண்டனை விதித்தான் அரசன்.
""திருடனை எளிதாகப் கண்டுபிடித்து விட்டீர்களே...'' என்ற அரசன் நீதிபதியை மிகவும் பாராட்டினான்.
***

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.