சுடுகாட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டதால் பிணத்தை தண்டவாளத்தில் வைத்து கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் அருகே உள்ளது பானம்பாக்கம் கிராமம். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் எனில் செஞ்சிபானம்பாக்கம் ரெயில்வே கேட்டை கடந்து தான் சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும். சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து பயிரிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சுடுகாட்டுக்கு செல்ல முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இது சம்பந்தமாக கிராம மக்கள் 3 முறை பிணத்துடன் செஞ்சிபானம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மறியல்
இந்த நிலையில் நேற்று பானம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (வயது 45) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். மாலை 3¾ மணியளவில் அவரது உடலை சுமந்து கொண்டு கிராம மக்கள் செஞ்சிபானம்பாக்கம் ரெயில்வே கேட்டை அடைந்தனர். பின்னர் அவர்கள் பிணத்தை தண்டவாளத்தில் வைத்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த கடம்பத்தூர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கிராம மக்கள் பிணத்தை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு சென்றனர். மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.