Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

ஓடும் ரெயில்களில் கழிவறை பாகங்களை திருடி வந்த பெண் கைது


ஓடும் ரெயில்களில் கழிவறை பாகங்களை திருடிய பெண்ணை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.

சாக்கு மூட்டையுடன் பெண்...

பீகார் மாநிலத்தில் இருந்து மும்பை குர்லா டெர்மினஸ் வரும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை பெய்த மழை காரணமாக சுமார் 4 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் காலை 10 மணியளவில் காட்கோபர் ரெயில் நிலையம் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த போது, பெண் ஒருவர் பெரிய சாக்குமூட்டையுடன் அந்த ரெயிலில் இருந்து இறங்கினார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் சுரேஷ் பாண்டே என்பவர் இதை கவனித்தார்.

அந்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவர், பெண்ணிடம் இருந்த சாக்குமூட்டையை பிரித்து பார்த்தார். அப்போது சாக்குமூட்டைக்குள் ரெயில் கழிவறை பாகங்கள் இருந்தன.

கழிவறை பாகங்கள் திருட்டு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரெயில் கழிவறை பாகங்களை கைப்பற்றியதுடன் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினார்.

இதில் அவர் காட்கோபர் மேற்கு பகுதியை சேர்ந்த சரிதா குப்தா (வயது45) என்பது தெரியவந்தது. கல்யாண் ரெயில் நிலையத்தில் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, கழிவறை கதவை பூட்டிக் கொண்டு அதன் பாகங்களை கழற்றி திருடி கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இதற்கு முன் அவர் பல ரெயில்களில் இவ்வாறு கழிவறை பாகங்களை திருடி அவற்றை பழைய இரும்பு கடையில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சரிதா குப்தா மீது வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.