சென்னையில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 நாட்களில் 161 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கமிஷனர் அதிரடி உத்தரவு
சென்னை நகரில் பெருகி வரும் கொலைச்சம்பவங்களை அடுத்து ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சென்னை பெருநகரில் ரவுடிகள், கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ரவுடிகள், முக்கியமாக சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் அல்லது விளைவிக்கக்கூடும் என சந்தேகிக்கும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சென்னையில் 4 மண்டலங்களில், வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், தெற்கு மண்டலத்தில் அடையாறு, தியாகராயநகர், புனித தோமையர்மலை, மேற்கு மண்டலத்தில் புளியந்தோப்பு, அம்பத்தூர், அண்ணாநகர், கிழக்கு மண்டலத்தில் கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய 12 மாவட்டங்களிலும், நான்கு மண்டல இணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
161 ரவுடிகள் சிக்கினார்
மேலும், மத்திய குற்றப்பிரிவு ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு உதவி கமிஷனர் தலைமையில் காவல் குழுவினர் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் மேற்கூறிய 12 மாவட்டங்களிலும் சிறப்பு தனிப்படையினர் மற்றும் ரவுடிகள் கண்காணிப்பு பிரிவினரால் 161 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வடக்கு மண்டலத்தில் மேற்கொண்ட ரவுடிகள் தேடுதல் வேட்டையில் மாதவரம் காவல் எல்லையில் 28 பேர், வண்ணாரப்பேட்டையில் 25 பேர் மற்றும் பூக்கடையில் 16 பேர் என மொத்தம் 69 ரவுடிகள் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தெற்கு மண்டலத்தில் நடத்திய சோதனையில் தியாகராயநகர் காவல் எல்லையில் 13 பேர், அடையாறில் 15 பேர் மற்றும் புனித தோமையர்மலையில் 26 ரவுடிகள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 54 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரவுடிகள் வேட்டை தொடரும்
கிழக்கு மண்டலத்தில் சிறப்பு தனிப்படையினர் கண்காணித்து கீழ்ப்பாக்கம் காவல் எல்லையில் 12 பேர், திருவல்லிக்கேணியில் 5 பேர், மயிலாப்பூரில் 2 பேர் என மொத்தம் 19 ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
இதே போல மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான படையினர் 12 ரவுடிகளை கைது செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ரவுடிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து துரிதமாக செயல்படுத்த சென்னை பெருநகர காவல்துறை உயரதிகாரிகளுக்கு கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.