பெங்களூருவில் நேற்று நடந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கன்னத்தில் பெண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்க்கொடி தூக்கியுள்ளனர்
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரியாக சித்தராமையா உள்ளார். இவரை சுற்றி தற்போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. அர்க்காவதி லே–அவுட் நில விடுவிப்பு, தனது மகன் பங்குதாரராக உள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் உடல்பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கியது, விலை உயர்ந்த கைக்கெடிகாரத்தை பரிசாக பெற்றது என தொடர்ந்து அவருக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் வரிந்துகட்டி நிற்கின்றன.
இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்டு 14 மந்திரிகள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிதாக 13 மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மந்திரி பதவியை இழந்த சீனிவாச பிரசாத், அம்பரீஷ் உள்பட அதிருப்தியாளர்கள் சித்தராமையாவுக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவித்து உள்ளனர். முதல்–மந்திரி பதவியில் இருந்து சித்தராமையாவை நீக்கியே தீர வேண்டும் என்று அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது சித்தராமையாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் பணியில் சித்தராமையா இறங்கியுள்ளார்.
இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கர்நாடக குருபர சங்கம் சார்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ–மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் மற்றும் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள நலப்பாடு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
சித்தராமையாவுக்கு திடீர் முத்தம்
இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு குருபர சமுதாயத்தை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குருபர சமுதாயத்தை சேர்ந்த கவுன்சிலர்களை பாராட்டியும் பேசினார். விருதுகள் வழங்கும்போது, மேடையில் இருந்த ஒரு பெண், நின்று கொண்டிருந்த சித்தராமையாவின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். புகைப்படம் எடுத்து முடித்தவுடன் அந்த பெண் எதிர்பாராதவிதமாக திடீரென சித்தராமையாவை கட்டி அணைத்து கன்னத்தில் ‘இச்‘ என்று ஒரு முத்தம் கொடுத்தார்.
அந்த முத்தத்தை நிராகரிக்காமல் சித்தராமையா புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார். முத்தம் கொடுத்த பெண், மகிழ்ச்சி பொங்க மேடையில் இருந்து இறங்கி சென்றார்.இதை கவனித்த மேடையில் இருந்தவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். முதல்–மந்திரிக்கு பெண் முத்தம் கொடுத்த விவகாரம் கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளிபரப்பானது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்–மந்திரி சித்தராமையா, “எனக்கு முத்தம் கொடுத்த பெண் என் மகளுக்கு சமமானவர். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம்“ என்றார்.
மகிழ்ச்சியில் முத்தம்
முத்தம் கொடுத்த பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விவரங்கள் உடனடியாக சேகரிக்கப்பட்டன. அதாவது சித்தராமையாவுக்கு முத்தம் கொடுத்தவர், சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பஞ்சாயத்து கவுன்சிலர் கிரிஜா சீனிவாஸ் என்பது தெரியவந்தது.
சித்தராமையாவுக்கு முத்தம் கொடுத்தது குறித்து கிரிஜா சீனிவாஸ் நிருபர்களிடம் கூறும்போது, “நான் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியை(சித்தராமையாவின் தொகுதி) சேர்ந்தவள். நான் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயை சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளேன். முதல்–மந்திரி சித்தராமையாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்தது. இன்று(நேற்று) அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சித்தராமையாவின் அருகில் இருந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இந்த மகிழ்ச்சியில் சித்தராமையாவின் கன்னத்தில் முத்தமிட்டேன்“ என்றார்.
பரபரப்பு
பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் முதல்–மந்திரி சித்தராமையாவை பெண் கட்டி அணைத்து பகிரங்கமாக முத்தம் கொடுத்த சம்பவம் புதிய சர்ச்சையுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.