தாய்லாந்தில் உள்ள புத்த கோவிலில் குளிர் சாதன பெட்டி ஒன்றில் நாற்பது புலிக் குட்டிகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் கஞ்சனாபுரி மாகாணத்தில் ஒரு புத்த கோவில் உள்ளது. அங்கு வன விலங்குகள் கடத்தி வரப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் வன உயிரினங்கள் துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில் உறைய வைக்கும் குளிர்பதன பெட்டியில் 40 புலிக்குட்டிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ள இந்தப்புத்த கோவில் மூலம் வருடத்திற்கு பல மில்லியன் டாலர் அளவு வருமானம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து வன உயிர்கள் கடத்தப்படுவதாகவும் அதனை தவறாக நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்ததை அடுத்து வன உயிரினங்கள் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விலங்கின ஆர்வலர்கள் இந்த புத்த கோவிலை மூடுவதற்காக நெடுங்காலமாக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.