Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

தேனி அருகே மகளுடன் இளம்பெண் கடத்தல்


தேனி அருகே தாய் வீட்டுக்கு மகளுடன் சென்ற இளம்பெண் கடத்தப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

கம்பம் திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவரது மனைவி தேன்மொழி (வயது29). இவர்களது மகள் யுவஸ்ரீ (11).

சம்பவத்தன்று தேன்மொழி மகளுடன் சின்னமனூர் அருகே மார்கையன்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். மாலையில் ஊர் திரும்பினார்.

ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை. இதனை அறிந்த பெரியகருப்பன் அதிர்ச்சி அடைந்ததார். மாமியார் வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது தேன்மொழி மகளுடன் ஊர் திரும்பி விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் பல இடங்களில் தேடி பார்த்தார் காணவில்லை. அவர்களை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தேன்மொழி மகளுடன் எங்காவது சென்றாரா? என தெரிய வில்லை. இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

சின்னமனூர் அருகே உள்ள கே.கே.குளத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் சோனியா. பிளஸ்–2 முடித்துள்ளார். சம்பவத்தன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த சோனியா அதிகாலை 3 மணி அளவில் திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் காணவில்லை.

இது குறித்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.