மத்திய பிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்ததாக கூறி இசை ஆசிரியரை மாணவிகள் சரமாரியாக அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர். அங்கு பயிலும் மாணவிகளை தொடர்ந்து கிண்டல், கேலி செய்ததோடு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்களது நண்பர்களுடன் இணைந்து ஆசிரியர் நிரஞ்சன் பட்னாகரை தெருவுக்கு இழுத்து வந்து ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கினர்.
ஆசிரியரை வெகு நேரம் மாணவிகள் அடித்து உதைத்தபிறகே சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். அங்கிருந்து அவரை மீட்ட போலீசார், சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை ஆசிரியர் நிரஞ்சன் மறுத்துள்ளார். வேண்டுமென்றே மாணவிகள் தன் மீது பழி போடுவதாகவும் அவர் கூறுகிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.