சென்னை அயனாவரத்தில் போலீஸ் வாகனம் மோதியதில் மாணவன் ஒருவன் பலியாகினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை அயனாவரத்தில் இன்று மாலை 10ம் வகுப்பு மாணவர் ராம் குமார் மற்றும் மற்றொரு மாணவன் சாலமன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் பைக் மீது காவல்துறையின் வாகனம் மோதியது. இதில் மாணவர் ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். சாலமன் காயமடைந்தார்.
இந்த விபத்தை பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய காவல்துறை வாகனத்தை தாக்கினர். அத்துடன் புரசை வாக்கம்-அயனாவரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விபத்தை ஏற்படுத்திய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை கலைந்து செல்லும்படி கூறினர். பொதுமக்கள் கலைந்து செல்லாமல் கோஷமிட்டனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றபோது கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே காவல்துறை வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விபத்து மற்றும் சாலை மறியல் காரணமாக அயனாவரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.