பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளை இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
ஸ்டேட் வங்கி யோசனை
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்டிரா 2008–ம் ஆண்டும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் 2010–ம் ஆண்டும் இணைக்கப்பட்டன.
இதையடுத்து, தனது மற்ற துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் ஆகியவற்றையும் தன்னுடன் இணைக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி கடந்த மாதம் யோசனை தெரிவித்தது.
ஒப்புதல்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் 5 துணை வங்கிகளையும் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்த முடிவை தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையில், 3 துணை வங்கிகளின் பங்கு மதிப்பு 20 சதவீதம் உயர்ந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மதிப்பு 3.9 சதவீதம் உயர்ந்தது.
பாரத ஸ்டேட் வங்கிக்கு தற்போது 16 ஆயிரத்து 500 கிளைகள் உள்ளன. இவற்றில், 36 வெளிநாடுகளில் உள்ள 191 கிளைகளும் அடங்கும். இந்த இணைப்புக்கு பிறகு, அதன் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாகவும், கிளைகள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 500 ஆகவும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 50 கோடியாகவும் உயரும்.
உலக பட்டியலில் இடம் பிடிக்கும்
இந்த இணைப்பை வரவேற்று பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது:–
இந்த இணைப்பு, இருதரப்புக்கு மட்டுமின்றி, துணை வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும். ஸ்டேட் வங்கி நெட்வொர்க் அதிகரிப்பதுடன், அதன் வீச்சு பெருகும். ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பெறலாம்.
தற்போது, உலகின் முன்னணி 50 வங்கிகள் பட்டியலில் எந்த இந்திய வங்கியும் இடம்பெறவில்லை. இனிமேல், இடம்பெற வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.