Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

வீட்டில் நிறுத்தி இருந்த காரை எடுக்கும் போது விபத்து ஹாலிவுட் நடிகர் பலி


ஸ்டார் டிரெக் வரிசை படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் ஆண்டன் யெல்சின்.  அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த
இவர் நேற்று புதிய படம் ஒன்றின் நடிக்க ஒத்திகை பார்க்க வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

நடிகரின் வீடு மிகவும் மேடான பகுதியில் அமைந்துள்ளதால், காரை எடுக்க முயன்றபோது அது எதிர்பாராத விதமாக பின்னோக்கி சரிந்து சென்றுள்ளது.

உடனடியாக காரின் பின்பக்கம் வந்து காரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது, வேகமாக சென்ற கார் அவர் மீது மோதி தள்ளியுள்ளது.

தள்ளப்பட்ட நடிகர் துரதிஷ்டவசமாக அருகில் இருந்த செங்கல் தூண் மீது பலமாக மோதியுள்ளார்.தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஒத்திகைக்கு நடிகர் வராததால் அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது ஹாலிவுட் பிரபலங்கள் நடிகரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.