Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 19, 2016

ஆட்சியில் இருப்பவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இல்லை: ‘தோல்வி அடைந்த நாமும் அதிக சோர்வில் இல்லை’ மு.க.ஸ்டாலின் பேச்சு


வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களும் பெரும் மகிழ்ச்சியில் இல்லை. தோல்வி அடைந்த நாமும் அதிக சோர்வில் இல்லை என மு.க.ஸ்டாலின் பேசினார்.

‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

தமிழ் மாநில தேசிய லீக் சார்பில், ‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘இப்தார்’ நோன்பை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இஸ்லாம் சமுதாய மக்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருப்பார்கள். தற்போது வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பவர்களும் பெரும் மகிழ்ச்சியில் இல்லை. அதே நேரம் தோல்வி அடைந்த நாமும் அதிக சோர்வில் இல்லை.

ஆட்சி பொறுப்பில்இருந்து தான்...

இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், தமிழக சட்டமன்றத்தில் 1971-ம் ஆண்டு 184 இடங்களில் வெற்றி பெற்று அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்ட கட்சி என்ற வரலாறு படைத்தது. அப்போது கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார்.

இப்போது அதிக 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று அதிக இடங்களை பெற்ற எதிர்க்கட்சி என்ற வரலாறு படைத்துள்ளது. இப்போது நான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். எது எப்படி இருந்தாலும் நாம் நம் பணியை நடத்த ஆட்சி பொறுப்பில் இருந்து தான் செய்ய வேண்டும் என்பதல்ல.

திட்டங்களைசெயல்படுத்தும் கருவி

ஆட்சி பொறுப்பு என்பது திட்டங்களை செயல்படுத்தும் ஒரு கருவி. உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற சட்டமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘இப்தார்’ நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன், எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், கு.க.செல்வம், டி.பி.எம்.மைதீன்கான், அபுபக்கர், சேகர்பாபு, முன்னாள் அமைச்சர் ரகுமான் கான், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் மற்றும் பேராயர் எஸ்றா சற்குணம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.