Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

மும்பையை சுற்றி பார்க்க வீட்டை விட்டு ஓடிவந்து போலீசாரிடம் கடத்தல் நாடகமாடிய 3 சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்


மும்பையை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு வீட்டை விட்டு ஓடிவந்து போலீசாரிடம் கடத்தல் நாடகமாடிய 3 சிறுவர்களை போலீசார் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

3 சிறுவர்கள்

தானேயில் உள்ள ஒரு சாலையில் நேற்றுமுன்தினம் இரவு போக்குவரத்து போலீஸ்காரர் எஸ்.ஏ.சவுத்ரி என்பவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவர்கள் 3 பேர், எஸ்.ஏ.சவுத்ரியிடம் நாசிக்கை சேர்ந்த தங்களை சிலர் மயக்க மருந்து கொடுத்து காரில் கடத்தி வந்து விட்டதாகவும், அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாகவும் கூறி அழுதனர். உடனடியாக அவர் கடத்தல்காரர்களை பிடிப்பதற்காக போக்குவரத்து போலீஸ் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதற்கிடையே போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ரேஸ்மி கரந்தீக்கர் அங்கு வந்து மூன்று சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார்.

கடத்தல் நாடகம்

இதில் அவர்கள் நாசிக்கை சேர்ந்த அண்ணன் தம்பியான விஷால் (வயது15), நிகில் (14) மற்றும் அவர்களது அத்தை மகன் குணால் சாப்ளே (12) என்பதும், அவர்கள் கடத்தல் நாடகமாடியதும் அம்பலமானது.

மேலும் மூன்று பேரும் மும்பையை சுற்றி பார்க்க ஆசைப்பட்டு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ரெயிலில் வந்து தானே இறங்கி உள்ளனர். இரவாகி விட்டதால் பயந்து போய் மீண்டும் நாசிக் செல்ல முடிவு செய்தனர். ஆனால் நாசிக் செல்லும் ரெயில் குறித்த விவரம் தெரியாமல் தவித்தபோது, போலீசிடம் சென்று கடத்தல் நாடகம் ஆடினால் அவர்கள் தங்களது பெற்றோருடன் சேர்த்து விடுவார்கள் என்பதை அறிந்து, மேற்படி கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களது பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி தகவல் தெரிவித்தனர். மகன்களை காணாமல் தேடி அலைந்த அவர்கள் இதை கேட்டதும் தானே வந்தனர். பின்னர் சிறுவர்கள் மூன்று பேரும் அவர்களது பெற்றோரிடம் எச்சரித்து ஒப்படைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.