ஈழத் தமிழ் அகதிகள் 44 பேருடன் நடுக்கடலில் தத்தளிக்கும் படகை தமிழகத்துக்குத் திருப்பி அனுப்ப இந்தோனேசியா முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் தங்களை அங்கேயே சுட்டுக் கொல்லுமாறு பிஞ்சு குழந்தைகளுடன் கெஞ்சுகிற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவுகிறது.
தமிழக அகதிகள் முகாம்களில் இருந்த 44 ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட படகில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் இந்தோனேசியா அருகே அந்த படகு இயந்திரக் கோளாறால் தரை தட்டியது.
ஆச்சேவில் தத்தளிப்பு ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்களுடன் உள்ள இப்படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த படகு தொடர்பாக தகவல் கிடைத்த இந்தோனேசிய கடற்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அத்துடன் படகை கரைக்கு கொண்டு வந்து எரிபொருள் மற்றும் உணவு உதவிகளை வழங்கவும் இந்தோனேசியா முடிவு செய்தது. ஆனால் அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தது இந்தோனேசியா.
இந்த நிலையில் படகின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தமிழகத்துக்கே அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை படகில் உள்ள ஈழத் தமிழர்கள் ஏற்க மறுத்து தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்படி செய்யாவிட்டால் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என்று இந்தோனேசிய கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்படி இந்தோனேசிய கடற்படையிடம் சுட்டுக் கொல்லுமாறு கெஞ்சுகிற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.