Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்ய இலங்கை முடிவு


இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று கட்டப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  இது பற்றி அந்நாட்டு விளையாட்டு துறை மந்திரி தயாசிரி ஜெயசேகரா கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பாராளுமன்றத்தில் பேசும்பொழுது, 3 வட மாவட்டங்களில் முன்பே மாவட்ட பயிற்சியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு விட்டனர்.

உள்ளரங்கு கிரிக்கெட் பயிற்சி வசதிகள் மற்றும் அதற்கான தளங்கள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று எலிபெண்ட் பாஸ் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

ஜப்னா நுழைவு வாயில் பகுதியில் அமைந்த எலிபெண்ட் பாஸ் என்ற இடத்திலேயே உள்நாட்டு போர் நடந்து வந்தன.  அவர் தொடர்ந்து, முன்னாள் போர் பகுதியில் இருந்து இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆனது திறமையானவர்களை பயன்படுத்தி கொள்ளும் என்றும் கூறினார்.

கடந்த பல வருடங்களாக விடுதலை புலிகளின் முன்னாள் நிர்வாக தலைநகராக இருந்து வந்த கிளிநொச்சியில் இந்த வருட தேசிய விளையாட்டு திருவிழா நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியில் பெருமளவில் சிங்கள வீரர்களே இருந்தனர்.  அவர்களில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மற்றும் முன்னாள் சர்வதேச பேட்ஸ்மேனான ரஸ்செல் அர்னால்டு ஆகிய இருவரும் தமிழர்கள் என்பதுடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வட மாகாணத்திற்கு வெளியே இருந்து வந்தவர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.